பெண்களை வேலைக்கு செல்ல கட்டாயப்படுத்தக் கூடாது! கோர்ட்டு அதிரடி உத்தரவு!

 
பெண்கள் கோபம்

பெண்களை, படித்திருக்கிறார் என்பதற்காக, கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது, கட்டாயப்படுத்தவும்  கூடாது என்று மும்பை ஐகோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வெளியிட்டுள்ளது. 

மும்பை ஐகோர்ட்டில் கணவனை பிரிந்த பட்டதாரி பெண் ஒருவர், ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் பட்டதாரி பெண் என்பதால் வேலைக்கு சென்று தன்னை தானே கவனித்துக் கொள்ள வேண்டும். ஜீவனாம்சம் தர முடியாது என்பது போன்ற வாதங்கள் எதிர்மனுதாரர் சார்பில் வைக்கப்பட்டதாக தெரிகிறது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இதற்கு பதில் அளித்து தீர்ப்பு கூறிய ஐகோர்ட்டு நீதிமன்றம், ‘‘ஒரு பெண் பட்டதாரியாக இருப்பதால் அவரை வேலைக்கு செல்லும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண் வேலைக்கு செல்வதும், வீட்டிலேயே உட்கார்ந்து இருப்பதும் அவரது சொந்த விருப்பம். இதில் யாரும் தலையிட முடியாது’’ என்று அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

பெண்கள் சிலர் தங்கள் குழந்தைகளையும், வீட்டில் உள்ள பெரியவர்களை பராமரிப்பதற்காகவே வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதையும் தாண்டி சில பெண்கள் தாங்களாகவே முன் வந்து வேலைக்கு செல்ல விரும்புவார்கள். குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தன்னுடைய திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடனும் வேலைக்கு செல்கின்றனர். இருப்பினும் அவர்களை வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று யாரும் கட்டுப்படுத்த முடியாது என்பதை வாய்வழியில் எல்லோரும் சொல்லிக் கொள்வது வாடிக்கையான ஒன்றுதான். 

அலுவலகம்

ஆனால் மும்பை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பால், பெண்கள் வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்று இனி யாரும் நிர்ப்பந்தம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு பெண்கள் அமைப்பினர் பலர் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web