இன்று யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனுத் தாக்கல்!!

 
யஷ்வந்த் சின்ஹா

இந்தியாவின் ஜனாதிபதி ராம்கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அரசியல் கட்சிகள் மும்மூரமாக செயலாற்றி வருகின்றன. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரெளபதி முர்மு போட்டியிட உள்ளார். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக ஒன்றிய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட இருக்கிறார். இதில் திரெளபதிமுர்மு ஏற்கனவே மனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், இன்று காலை 11 மணி அளவில் யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். 

ராம்கோவிந்த்
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு, மாநிலத் தலைநகரங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்கிறார். இதனிடையே யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவுதர தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரான  தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யஷ்வந்த் சின்ஹா வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியின் போது, டி.ஆர்.எஸ் கட்சியின் கே.டி. ராமராவ் கலந்து கொள்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

திரௌபதி முர்மு
யஷ்வந்த் சின்ஹாவின் வயது 84.இவர்  பீகாரின் பாட்னாவை  சொந்த ஊராக கொண்டவர். இவர் 24 ஆண்டுகள் ஐஏஎஸ்  பணியில் இருந்தவர். அதன்பிறகு ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் இணைந்தார். 1986ல் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 1988ல் மாநிலங்களவை எம்பியாகவும்  சந்திர சேகர் அரசில் ஒன்றிய நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர். 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பின் வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார். பாஜ மூத்த தலைவர் அத்வானியின் பெரும் விசுவாசியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  யஷ்வந்த் சின்ஹா ஆரம்பம் முதலே கட்சியில் முக்கிய பிரச்னைகளில் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்.மோடி பிரதமரான பிறகு கட்சியிலிருந்து விலகி  திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web