தாய் திட்டியதால் வீட்டை விட்டு வெளியேறிய 13 சிறுமி... 37 மணி நேர தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்பு!
கேரளாவில் இருந்து தனது தாய் திட்டியதால், வீட்டிலிருந்து இரு உடைகளை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டு ரயிலில் கிளம்பிய சிறுமி, 37 மணி நேர தேடலுக்குப் பின்னர் விசாகப்பட்டினத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். சிறுமியை கேரளாவுக்கு அழைத்து வர கஜகூட்டம் பெண் எஸ்ஐ தலைமையிலான குழு விசாகப்பட்டினம் புறப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கஜக்கூட்டத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போன 13 வயது சிறுமியை அழைத்து வருவதற்காக கஜகூட்டம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழு இன்று அதிகாலை விசாகப்பட்டினம் புறப்பட்டது.

திருவனந்தபுரம் மாவட்டம் , கஜகூட்டம் புனித அந்தோணி பள்ளிக்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வரும் அன்வர் ஹுசைனின் மூத்த மகள் தஸ்மித் தம்சி என்ற சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமையன்று, தனது சகோதரிகளுடன் தகராறு செய்ததால் சிறுமியின் தாய் அவரைத் திட்டியுள்ளார். உடனடியாக தாயாரிடம் கோபித்துக் கொண்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
உணவு எதுவும் கிடைக்காததால் சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வந்த சிறுமியை மலையாளி சங்க பிரதிநிதிகள் கண்டுபிடித்தனர். ரயிலின் பெர்த்தில் சிறுமி படுத்திருந்தாள். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது, “குழந்தைக்கு உடல்நலக் குறைவு இல்லை. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த சிறுமி, அங்கிருந்து விசாகப்பட்டினம் சென்றார். சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியதாக போலீசாரிடம் கூறினார்.
37 மணி நேரத்திற்குப் பிறகு விசாகப்பட்டினத்தில் இருந்து காணாமல் போன சிறுமி பத்திரமாக கண்டுப்பிடிக்கப்பட்ட நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. 37 மணிநேர விரக்தி மற்றும் நிச்சயமற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தற்போது சிறுமி அங்குள்ள போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அவர் விரைவில் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணைக்குப் பிறகு அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.
எனது மகள் கண்டுபிடிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அன்வர் உசேன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக கேரளத்தில் இருந்து ரயிலில் கிளம்பிய சிறுமியை, அதே கோச்சில் பயணித்த சிலர், அழுதுக் கொண்டிருந்த சிறுமியை சந்தேகத்தில் செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். சிறுமி அவர்களிடம் ஏதும் பேசாமல் இருந்துள்ளார். அடுத்த நாள் சிறுமி காணாமல் போனது குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியானதும், ரயிலில் தூங்கி எழுந்த பயணிகள், நேற்றிரவு தங்களது பெட்டியில் பயணித்த சிறுமியாக இருக்குமோ என்கிற சந்தேகத்தில் போலீசாரிடம் புகைப்படத்தைக் காட்டி தகவல் தெரிவித்தனர். சிறுமியைக் கண்டுபிடிப்பதில் இந்த செய்தி உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
