அதிர்ச்சி.... சிப்ஸ் சாப்பிட்ட 14 வயது சிறுவன் பலி!!
கையில் ஆறாம்விரலாய் மொபைல்போன்கள் குடியேற தொடங்கிய நாள் முதல் அனைவருமே ஒரு கேமராமேனாகி விட்டனர். யூடியூபராகி விட்டனர். என்ன செய்தாலும் உடனே புகைப்படங்கள், ஷார்ட்ஸ், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் இன்னும் ஒரு படி மேலே போய் சமூக வலைதளங்களில் அனைவரும் மற்றவருக்கு Challenge விடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உலகம் முழுவதும் ஒன் சிப் சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.
ஒன் சிப் சேலஞ்ச் என்பது உலகில் மிகவும் காரமான சிப்ஸ் என கருதப்படும் ‘பாகுய்’ என்ற சிப்ஸை சாப்பிட்டு அதை வீடியோ எடுத்துப் பதிவிட்டு நண்பர்களுக்கு சவால் விட வேண்டும். இப்படி பலரும் ‘பாகுய்’ சிப்ஸை சாப்பிட்டு வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் ஹாரிஸ் வாலேபா என்ற 14 வயது சிறுவன் இந்த ஒன் சிப் சேலஞ்சில் கலந்து கொண்டார். காரமான சிப்ஸை சாப்பிட்டு வீடியோ வெளியிட்டால் நாம் வைரலாகி விடுவோம் என நினைத்து தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்.
இதனால் பள்ளியில் நண்பர்களின் முன்னிலையில் ‘பாகுய்’ சிப்ஸை சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சில நிமிடத்திலேயே சிறுவன் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார். ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ‘பாகுய்’ சிப்ஸ் நாம் வழக்கமாகச் சாப்பிடும் காரத்தை விடப் பலமடங்கு அதிகம் இருக்கும். இந்த சிப்ஸை சாப்பிட்டால் மாரடைப்பு கூட வரலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இருந்தாலும் ஆபத்தை உணராமல் பலரும் இந்த சிப்ஸை சாப்பிட்டு சவால் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!