நிஃபா வைரசால் 14 வயது சிறுவன் பலி... கதறும் பெற்றோர்!

கேரளாவில் நிஃபா வைரஸ் பரவல் தீவிரமாக வேகமெடுத்து பரவி வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பஞ்சாயத்தில் வசித்து வரும் 14 சிறுவன் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்ததாக புனே தேசிய வைரலாஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் உறுதி செய்திருந்தது. இதனையடுத்து அவன் கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்தச் சிறுவன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, அந்த மாணவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அப்பகுதி மக்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் “நிஃபா வைரஸ் குறித்து யாரும் பயப்பட தேவையில்லை. கண்காணிப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை போலீசார் உதவியுடன் தேடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா