வாளி தண்ணீரில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

 
குழந்தை நீரில் மூழ்கி தண்ணீர் வாளி பக்கெட்
 

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே புலவன்குடியிருப்பைச் சேர்ந்த ரவிக்குமார் (35) ஊர்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனைவியும், ஒரு மகளும், ஒன்றரை வயது மகனும் உள்ளனர். நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ரவிக்குமாரின் மனைவி வீட்டை சுத்தம் செய்வதில் ஈடுபட்டு இருந்தார்.

வாளி

அப்போது, வீட்டில் இருந்த பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை பிரேம்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்தது. இதை யாரும் கவனிக்காத நிலையில், மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்தது.

ஆம்புலன்ஸ்

பின்னர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சேரன்மாதேவி போலீசார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!