பகீர்... ‘ 5 நாட்களாக கொலப்பசி...’ இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்ட இளைஞன்!

 
பூனை

பசி வந்தா பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி. பட்டினியாக கிடக்கும் போது என்ன செய்கிறோம் எதை சாப்பிடலாம் என்று இருக்கும் போது எது கிடைத்தாலும் நம் உசிர தக்க வைக்க சரிதான் என்ற மனோநிலை வந்து விடும் என்கின்றனர் மனவியல் நிபுணர்கள். கேரளாவில் தொடர்ந்து 5நாட்களாக பட்டினியாக இருந்த ஒரு இளைஞர் பூனையை பச்சையாக சாப்பிட்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளைஞர்
கேரளாவில் குட்டிப்புரம் பகுதியில்  பேருந்து நிலையத்தில் 27 வயது இளைஞர் ஒருவர் நேற்று இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இதனை கண்ட அப்பகுதி  பொதுமக்கள் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்த போலீஸார் அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.  இது குறித்து அந்த இளைஞர் “ தான் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவன். வயது 27. 5 நாட்களாக கொலைப்பட்டினி. சாப்பிட எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் இப்படி நடந்து விட்டதாக கண்ணீர் விட்டு அழுது கொண்டே கூறியுள்ளார்”.

மேலும் அவர் தன்னுடைய வீட்டில் யாரிடமும் சொல்லாமல் டிசம்பர் மாதம் கேரளாவிற்கு டிரெய்னில் புறப்பட்டு வந்துள்ளார். இங்கு வந்து கடந்த 5 நாட்களாக உண்ணுவதற்கு எந்த உணவும் கிடைக்கவில்லை. பசியின் கொடுமையை தாங்க முடியாமல் இறந்த பூனையை பச்சையாக சாப்பிட்டதாக கண்ணீருடன் கூறினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி “ தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச் சென்று குறிப்பிட்ட இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினோம். 

பூனை

தொடர்ந்து 5 நாட்களாக உணவு எதுவும் சாப்பிடவில்லை எனக் கூறினார்.  நாங்கள் வாங்கித் தந்த உணவை மறுக்காமல் வாங்கிக் கொண்டு பசி தீர சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவர் யாரிடமும் சொல்லாமல் தலைமறைவாக ஓடி விட்டார்”. அதன் பிறகு மீண்டும் அவரை தேடிய போது இன்று காலை இளைஞன் உள்ளூர் ரயில் நிலையம் ஒன்றில் இருந்தார். அப்போது “சென்னையில் பணிபுரியும் அண்ணனின் மொபைல்   எண்ணை  கொடுத்தார். அவரைத் தொடர்பு கொண்டு இவர் கூறும் தகவல் சரியானது தானா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.    

அவரை திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். முதற்கட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபருக்கு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  உறவினர்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இங்கு வந்ததும் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்” என  கூறினார்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web