வீட்டிற்குள் புகுந்து 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. நெல்லையில் கொடூரம்!
திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு அருகே வீடு புகுந்து 2 வயது குழந்தைக்கு வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த புகாரின் பேரில் வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் பட்டு ராஜா (30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கயத்தாறு அருகேயுள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

அப்பகுதியினர் திரண்டு வந்து பிடிக்க முயன்ற போது, அவர் தனது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில், பைக் எண் மூலம் அவரை போலீசார் கண்டறிந்தனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்தும் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, பட்டுராஜாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
