மினி பஸ் மோதி 3 வயது குழந்தை பரிதாப பலி... 5 பேர் படுகாயம்... !!

 
மினி பஸ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பேருந்திற்காக பயணிகள் கூட்டம் ஒன்று பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தது. இந்த   பயணிகள் கூட்டத்தில் மினிபேருந்து  புகுந்ததில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.  இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் வசித்து வரும்  மாரீஸ்வரன்  மினிபேருந்து டிரைவர். இவர் இன்று காலை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் பகுதியில் இருந்து திருக்குமரன் நகருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றார்.

விபத்து


அருப்புக்கோட்டை ராஜீவ்நகரில் வசித்து வரும்  ராஜீவ்  நடத்துனராக சென்றார். 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்த மினி பஸ் அங்கு பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் திடீரென புகுந்துவிட்டது. இதனால்  அங்கிருந்தவர்கள் ஓடினர். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் அருகிலிருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் பாலவநத்தத்தில் வசித்து வரும்   அஜ்மீர் ரோஜா, இவரது குழந்தைகள் தானிஷ் அமகது , தானிஷ் முகமது  , அஜ்மீர் ரோஜாவின் பாட்டி மீரான் பீவி, அருப்புக்கோட்டை அம்மன் கோயில் தெரு  கருப்பசாமி, நெசவாளர் காலனி லட்சுமிபிரியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

ஆம்புலன்ஸ்


இந்த கோர விபத்தில்  சம்பவ இடத்திலேயே குழந்தை தானிஷ் அகமது உயிரிழந்தது.இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வந்து படுகாயம் அடைந்த 5 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து  மினி பஸ் டிரைவர் மாரீஸ்வரனை கைது செய்தனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web