குடி போதையில் 3 வயது குழந்தை மீது வெந்நீர் ஊற்றிய கொடூரம்.. சிறைக்கு சென்ற போதை ஆசாமி..!
குடிபோதையில் ஆசாமி இட்லி பானையை எட்டி உதைத்ததில், அதில் இருந்து வெந்நீர் ஊற்றி 3 வயது குழந்தை உடல் எரிந்தது. சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (55). இவர் அங்குள்ள நடைபாதையில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணியளவில் எருக்கஞ்சேரி மேலவீதியை சேர்ந்த வசந்த்(19) என்பவர் குடிபோதையில் வந்து தோசை கேட்டுள்ளார்.
அப்போது அண்ணாதுரை தோசை தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் வசந்த் தகராறு செய்துள்ளார். இதனால் அண்ணாதுரையும், அவரது மனைவி சாந்தாவும் வசந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வசந்த், டிபன் கடையில் இருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உதைத்ததில், அங்கு நின்றிருந்த அண்ணாதுரையின் 3 வயது பேரன் மீது, இட்லி பானையில் இருந்த வெந்நீர் பட்டு உடல் வெந்து போனது.
உடல் கருகி, வலியால் துடித்த குழந்தைக்கு, உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 20 சதவீத தீக்காயங்களுடன் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து, வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிந்து, வசந்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க