இன்று முதல் வாரத்துக்கு 4 நாள் வேலை திட்டம் அமல்.. ஊழியர்கள் வரவேற்பு... !

 
வாரத்துக்கு 4 நாள்

இன்று பிப்ரவரி 1 ம் தேதி வியாழக்கிழமை முதல் வாரம் 4 நாள் மட்டுமே பணி நாள் . 3 நாட்கள் ஓய்வு என்ற நடைமுறைக்கு மாறுகின்றன.  சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தால்  உற்பத்தி திறன்,  பொருளாதார விளைவு ஆகியவை குறித்து   ஆராயப்படும். இன்று முதல் 6 மாதங்களுக்கு வாரம் 4 நாள் வேலை முறையை செயல்படுத்திப்படும்.  அதன் விளைவுகளை ஆராய ஜெர்மனி  போன்ற வளர்ந்த நாடுகள்  முடிவு செய்துள்ளன.  

வேலை நாட்களை 4 ஆகக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் வீதம், 4 நாட்களுக்கு 32 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் நாள் ஒன்றுக்கு 10 மணி நேரம் வீதம், வாரம் ஒன்றுக்கு 40 மணி நேரம் வேலை நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2022லிருந்தே    ஆஸ்திரேலியா,  ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து, பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்பெயின், கனடா, ஸ்வீடன் நாடுகளில் வாரம் 4 நாள் வேலை திட்டம் அமலில் இருந்து வருகிறது. மேலும்   டென்மார்க், யு.ஏ.இ, பின்லாந்து, நெதர்லாந்து, இங்கிலாந்திலும் வாரம் 4 நாள் வேலை முறை சோதனை அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ளது.  

4 நாட்கள் வேலை

உலகம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பணிநாட்கள்.  வளர்ச்சி அடைந்த நாடுகள்  பலவற்றிலும் பணிபுரியும்  ஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள்  வழங்கி வருகின்றன.  குறிப்பாக ஜப்பான், பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன் உட்பட   நாடுகளில் ஊழியர்கள் குறைவான நேரம் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெர்மனியும் ஊழியர்களுக்கு புதிய சலுகைகளை வழங்கியுள்ளது.அதாவது, ஜெர்மனியில் வேலை செய்யும் ஊழியர்கள் வாரத்தில்  4 நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும் என்ற திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது.3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு வருவதால் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவது மட்டுமல்லாமல் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

அரசு ஊழியர்கள்

 நிறுவனத்தின் உற்பத்தித் திறன் தொடர்ந்து அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதால் இத்தகைய புதிய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது.  4 நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய திட்டம் பிப்ரவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்  இதே போல நடைமுறை கொண்டு வரப்படுமா என ஊழியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web