”பிளாஸ்டிக் யூஸ் பண்ணாதீங்க”.. ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு.. சாதனை படைத்த எல்.கே.ஜி சிறுவன்..!

 
ஜஸ்வின்

5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 15 நிமிடத்திலேயே கடந்த 5 வயது சிறுவன்...

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த 5 வயது சிறுவன் புதிய முயற்சியை எடுத்துள்ளார். இதை அவரது உறவினர்கள் வெகுவாக வரவேற்றனர். தான் நெடுநாள் பயிற்சி பெற்று வரும்  ரோல் ஸ்கேட்டிங் மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்த எல்.கே.ஜி படிக்கும் ஜஸ்வின்  என்கிற சிறுவன் தன்னுடைய பெற்றோர்கள் உந்ததுலின் பேரில் ஈடுபட்டார்.

அந்த வகையில் ஜஸ்வின் என்கிற எல்.கே.ஜி படிக்கும் சிறுவன் தஞ்சை மணிமண்டபத்தில் இருந்து யாகப்பள்ளி வரை ரோல் ஸ்கேட்டிங் மூலம் 5 கிலோமீட்டர் தூரம் வரை 15 நிமிடத்தில் கடந்தார். இது ஆல் இந்தியா புக் ரெக்கார்டில் இடம் பெற்றதன் மூலம் புதிய சாதனை படைத்தார். போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் சாவகசமாக ஸ்கேட்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் சிறுவன் ஈர்த்தார்.

இந்த சிறுவயதில் ரோல் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவனை வெகுவாக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இதுத் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web