வாய்க்காலில் சுற்றித் திரிந்த 7 அடி முதலை... பீதியில் உறைந்த விவசாயிகள்!
திருச்சி மாவட்டத்தில் வாழை தோட்டத்துக்கான வாய்க்காலில் 7 அடி நீளமுள்ள முதலை சுற்றித் திரிந்ததால் கிராம மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள உய்யகொண்டான் வாய்க்காலில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் சிறுகாடு பகுதியில் பாயும் ஒரு வாழை தோட்ட வாய்க்காலிலும் கலந்துள்ளது.

இந்நிலையில் அந்த வாய்க்காலில் திடீரென ஒரு பெரிய முதலை மிதந்து கொண்டிருப்பதை அப்பகுதி விவசாயிகள் கவனித்தனர். சுமார் 7 அடி நீளமுள்ள அந்த முதலை நீரில் சுற்றித் திரிந்தது. இதனால் பயந்த விவசாயிகள் உடனே பெட்டவாய்த்தலை போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு, முதலையை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விடுவித்தனர்.

அந்த முதலை மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரோடு அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
