சோகம்... 9 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பரிதாப பலி...!!

 
கிணறு

திருப்பத்தூர் மாவட்டம்   குனிச்சு மோட்டர் பகுதியில் வசித்து வரும் தம்பதி  மஞ்சுநாதன் மற்றும் கீதா .  இவர்களுக்கு  4 பிள்ளைகள் உள்ளன. மஞ்சுநாதன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் காலமானார். இதன் பிறகு   கீதா சற்று மனநிலை பாதிக்கப்பட்டார்.  

கிணறு

இவர்களுக்கு நந்தினி, நந்தகுமார், குருதியின், பூவரசன் என 4 பிள்ளைகள் உள்ளன. இதில் 3 வது  மகனான  9 வயது பூவரசன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டார். இந்த கிணறு   கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமானது.இச்சம்பவம் குறித்து   தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்   ஒரு மணி நேரம் போராடி கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

ஆம்புலன்ஸ்

மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குனிச்சி மோட்டூர் பகுதியில் கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web