அச்சச்சோ... கோபி மஞ்சூரியனுக்கு தடை... உணவு பிரியர்கள் அதிர்ச்சி.. !

 
கோபி மஞ்சூரியன்

சைவ உணவுப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருப்பது கோபி மஞ்சூரியன். காலிஃபிளவர் பூக்களை தனித்தனியாக பிரித்தெடுத்து அதில் சைனீஸ் சாஸ் ஊற்றி பொரித்தெடுக்கப்படுகிறது. அசைவ உணவு பிரியர்களுக்கு சிக்கன் 65 போல சைவ உணவு ஆர்வலர்களுக்கு இந்த கோபி மஞ்சூரியன்.   இந்நிலையில் கோவா மாநிலத்தை சேர்ந்த மாபுசா நகரம் கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்துள்ளது.

கோபி மஞ்சூரியன்

கோபி மஞ்சூரியனில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த தொடர் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில்  கோபி மஞ்சூரியனுக்கு மாபுசா நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது. 2022ல்  ஸ்ரீ தாமோதர் கோவிலில் வாஸ்கோ சப்தா கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் கோவா மாநிலத்தின் மோர்முகாவ் முனிசிபல் கவுன்சிலுக்கு கோபி மஞ்சூரியன் விற்கும் ஸ்டால்களைக் கட்டுப்படுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

கோபி மஞ்சூரியன்

அத்துடன்  உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகம் திடீர் சோதனை நடத்தியது.   அசைவம் சாப்பிடாத பலரும், சிக்கன் மஞ்சூரியனுக்கு பதில் கோபி மஞ்சூரியனை ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். சீன வம்சாவளியான இந்திய  சமையல் கலைஞர் நெல்சன் வாங் தான்  1970 களில் சிக்கன் மஞ்சூரியனை கண்டுபிடித்தவர். இந்திய கிரிக்கெட் கிளப்பில் உணவு சமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, புதுமையான உணவை கண்டுபிடிக்கும் முயற்சியில், சிக்கன் மஞ்சூரியனை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web