அரசு மருத்துவமனை ஃப்ரிட்ஜில் பீர், சோடா பாட்டில்... திடீர் ஆய்வில் அதிர்ச்சி!

 
பீர்

 அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளில் பல்வேறு வகைகளில் அலட்சியம் காணப்படுவது வழக்கமான ஒன்றாகி வருகிறது.  அந்த வகையில்  உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்யேல் மாவட்டத்தில் உள்ள தர்பா என்ற இடத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.அதன்படி  மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி வினய் குமார் சிங் அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு நடத்தினார்.  

பீர்

அங்கு இருந்த ஃப்ரிட்ஜை திறந்து பார்த்ததில் அதில் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் என எதையுமே காணோம். அதற்கு பதிலாக  பீர் கேன்களுடன் தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களையும் கண்டெடுத்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து  மாவட்ட சுகாதார அதிகாரி தீவிர விசாரணை மேற்கொண்டார். அதில்  பிரிட்ஜ்னில் பீர், தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களை வைத்த ஊழியர் ஹரி பிரசாத்தை பணியிடை நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற பொருட்கள் இருந்தது மிகவும் கண்டனத்திற்குரியது என விளக்கமும் அளித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  மாவட்ட சுகாதார அதிகாரி உறுதியளித்துள்ளார். 

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!