விடிஞ்சா கல்யாணம்... தோழியை பலாத்காரம் செய்த ஆண் நண்பர்... திருமணத்தை நிறுத்திய மணமகனின் பெற்றோர்!

 
அக்னியை வலம் வரவில்லைஇ என்றால் திருமணம் செல்லாது

”புதிய பாதை” திரைப்படத்தில் திருமணத்துக்கு முந்தைய நாள் பார்த்திபன் மணமகளை பாலியல் பலாத்காரம் செய்துவிடுவார். அதன் பிறகு திருமணம் நிறுத்தப்பட்டு கதாநாயகி  பார்த்திபனுடன் வாழ்த்தொடங்குவாள் . இதே போல் ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.  மத்திய பிரதேசம் மாநிலம் ரேவாவில்  23 வயது பெண் ஒருவருக்கு  டிசம்பர் 3 ம் தேதி திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   இதற்காக மண்டபம் பார்த்து, உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி விட்டனர்.  

பாலியல் செக்ஸ் பலாத்காரம் கற்பழிப்பு பெண்


இந்த சூழலில் மணநாளுக்கு முந்தைய தினமான டிசம்பர் 2ம் தேதி  மணமகளை,நன்கு அறிந்த இளைஞர் ஒருவர் அவரை   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன்  அது குறித்து வீட்டாரிடம் தெரிவிக்கக் கூடாது எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனால் பயந்துபோன மணமகள் சோகத்தில் முடங்கிவிட்டார்.   மகள் சோகமே உருவாக இருந்ததை கண்டு  மணமகளின் தாயார் வற்புறுத்திக் கேட்டுள்ளார். உடனே   இளம்பெண் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.  திருமண வீடே அமளி துமளி பட்டது.  இறுதியாக இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து தீர யோசித்த மணமகன் வீட்டார், திருமண ஏற்பாட்டை நிறுத்துவது என முடிவு எடுத்தனர். திருமணத்திற்கு முந்தின நாள் இரவு தான்   இந்த முடிவு எட்டப்பட்டது.

போக்சோ நீதிமன்றம்
இது நடந்து ஒன்றரை மாதங்கள் கடந்து விட்ட நிலையில் காவல்நிலையத்தில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.   ஜனவரி 23ம் தேதி  புகார் அளித்ததில், அடுத்த நாளே பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 24 வயது ஆணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணின் தனியுரிமை மற்றும் பாதுகாப்புக்காக அவரது தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படவில்லை.   பாலியல் பலாத்காரம், நின்று போன திருமணம் என அவரின் குடும்பத்தினர்  நிலைகுலைந்து வீட்டிலேயே முடங்கிப் போயினர்.  போக்சோ நீதிமன்றத்தில் ஏற்கனவே இது மாதிரி சம்பவம்  புகார் தெரிவிக்கப்பட்டதில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக ஆயுள் தண்டனை   அதிரடி தீர்ப்புகளை வழங்கப்பட்டது. இதன் பிறகே  இளம்பெண் வீட்டார், பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web