பகீர் வீடியோ... கால் முறிவுக்கு அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட அவலம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வெப்பாலம் பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த மீனா, வேம்பரசன், பரிமளா, ராஜேஷ்குமார் 4 பேருக்கும் காலில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது முறிந்த கால்களுக்கு அட்டை பெட்டிகளை வைத்து கட்டுப்போட்டு முதலுதவி செய்தனர். இந்த முதலுதவிக்குப் பிறகு விபத்துக்குள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ரத்தம் கசிந்து அட்டைப்பெட்டிகள் சேதம் அடைந்து, மேலும் காயத்தை பெரிதாக்கும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ துறை உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!