ஊசி போடும் போது அலட்சியம்.. இடுப்பிலேயே உடைந்து சிக்கிக்கொண்ட கொடூரம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்.!

 
சூர்யபிரகாஷ்

சென்னை பாடி சத்யா நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் லோக சந்துரு. இவரது மகன் சூர்யபிரகாஷ் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மதியம் சூர்யபிரகாஷ் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது, ​​அங்கிருந்த இரும்பு கம்பி கையை லேசாக கிழித்தது.

அலட்சியமாக தடுப்பூசி செலுத்திய செவிலியர்…சிறுவனுக்கும் நேர்ந்த துயரம்!

இதனால் அவரது பெற்றோர் சூர்யபிரகாஷை அருகில் உள்ள  ராஜம் நர்சிங் ஹோமுக்கு  டிடி ஊசி போட்டுக்கொள்ளுமாறு அனுப்பி வைத்தனர். சூர்யபிரகாஷின் இடுப்பில் நர்ஸ் ஊசியை செலுத்தும் போது, ​​அந்த ஊசி எதிர்பாராதவிதமாக உடைந்து அவரது இடுப்பில் சிக்கிக் கொள்கிறது.இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், சூர்யபிரகாஷை அருகில் உள்ள ஸ்கேன் செட்டரிடம் சென்று ஸ்கேன் எடுக்கும்படி கூறினார். ஸ்கேன் சென்டருக்கு செல்ல ஆம்புலன்ஸ், கார் ஏற்பாடு செய்யாததால் நடந்தே ஸ்கேன் சென்டருக்குச் சென்றார் சூர்ய பிரகாஷ்.

பின்னர் அவர் நடக்கும்போது, ​​​​ஊசி சதைக்குள் ஆழமாகச் சென்று குத்தியுள்ளது. வலியால் வேதனையடைந்த அவர், தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். இதையறிந்த அவர் உடனடியாக ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுத்துவிட்டு நர்சிங் சென்டருக்கு சென்ற ராஜம் செவிலியர்கள், டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தார்.மேலும், சம்பவ இடத்துக்கு வந்த சூரிய பிரகாஷின் தந்தை, உடனடியாக அவரை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஊசியை அகற்றும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை

அதன்படி, கடந்த 10ம் தேதி இரவு சூரிய பிரகாஷுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுமார் 3 மணி நேர சிகிச்சைக்கு பின், சிக்கிய ஊசி அகற்றப்பட்டது. இதுகுறித்து சூரிய பிரகாஷின் தந்தை லோகசந்துரு கடந்த 11ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 14ஆம் தேதி CSR பதிவு செய்யப்பட்ட நிலையில், 18ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை என்று லோகசந்துரு குற்றம் சாட்டினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் ஹோம் தரப்பில் 10க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக செல்லுமாறு கூறியதாகவும் லோக சந்துரு தெரிவித்தார்.கொரட்டூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் லோக சந்துரு புகார் அளித்துள்ளார். மேலும் அலட்சியமாக செயல்படும் நர்சிங் சென்டரை  நிரந்தரமாக மூட வேண்டும் என சூர்யபிரகாஷின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web