பகீர்...40 பயணிகளுடன் பாலத்தில் தொங்கிய பேருந்து... !!

 
பேருந்து விபத்து

சென்னையில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று நேற்று செப்டம்பர் 25ம் தேதி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை திருவாரூர் மாவட்டம் சந்திரசேகரபுரம்   வீரமணி  ஓட்டினார். பேருந்தில் சுமார் 40 பயணிகள் வரை  பயணம் செய்தனர்.பேருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு  கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் குறுக்கு சாலை வெள்ளாற்று மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.

பேருந்து விபத்து

அப்போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதிய பேருந்து, சுவரை உடைத்துக்கொண்டு சென்று, முன்பகுதி மட்டும் பாலத்தில் அந்தரத்தில் தொங்கியப்படி நின்றது.  உள்ளே இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.பேருந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததால் பயணிகளால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. பயணிகளின் சத்தத்தை கேட்ட அப்பகுதியில் வசிக்கும்  மக்கள், உடனடியாக சென்று பேருந்தின் கண்ணாடியை உடைத்து அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.

போலீஸ்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த காவல்துறையினர், பயணிகளை மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் மீட்பு வாகனம் கொண்டு, அந்தரத்தில் தொங்கிய பேருந்து மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web