கார் மரத்தில் மோதி 5 பேர் பலி.. திருமணத்திற்கு சென்று திரும்பிய போது சோகம்...!!

 
விபத்து

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரே காரில்  வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கார், கிரித் மாவட்டம் பக்மாரா பகுதியில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  உடனடியாக  போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்து


காரில் இருந்த 10 பேரில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த  விசாரணையில், காரில் பயணம் செய்தவர்கள் தோரியா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர்கள் எனத்  தெரியவந்துள்ளது.

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்
 அவர்கள், சுமார் 40 கிமீட்டர் தொலைவில் உள்ள திகோடி என  பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு தங்கள் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.  ஓட்டுநரின் கவனக்குறைவால் ஓட்டுநர் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் விபத்தில் உறவினர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!

From around the web