நடுரோட்டில் திடீரென தீப்பற்றிய கார்... நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி!
திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே நடுரோட்டில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால், கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் காதர், தனது மனைவி சஜிதாவுடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். இவர்களது கார் கார் திருச்சி மாவட்டம் வாத்தலை அருகே சென்றுக் கொண்டிருந்த போது திடீரென கார் இன்ஜினில் இருந்து புகை கிளம்பியிருக்கிறது.
காரில் இருந்து புகை வருவதைப் பார்த்து பயந்த அப்துல் காதர் உடனடியாக காரின் பிரேக்கை வேகமாக அழுத்தியதில் கார் தாறுமாறாக திரும்பி சாலையின் ஓரம் நின்றது. இதில் கணவன், மனைவி இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. பின்னர் இருவரும் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கினர்.
இருவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே காரில் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், காரில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் காரில் பெட்ரோல் முழுமையாக நிரப்பப்பட்டிருந்ததால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. சரியான நேரத்தில் காரை விட்டு வெளியேறியதால் கணவன், மனைவி இருவரும் லேசான காயங்களுடன் நூலிழையில் உயிர் தப்பினர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
