கடைக்குள் புகுந்த கார்...இருவர் படுகாயம்!!

 
 கார் விபத்து

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசித்து வருபவர்    சூரியகுமார். இவர், கத்தார் நாட்டில் தகவல் தொழில்நுட்ப என்ஜினியராகப் பணிபுரிந்தவர் .விடுமுறையில் சூலூரில் உள்ள வீட்டிற்கு வந்த சூரியகுமார் சிங்காநல்லூர் பகுதியில்  காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக  ஆக்சிலேட்டரை வேகமாக அமுக்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைகளில் புகுந்து விபத்துக்குள்ளானது.

விபத்து

இச்சம்பவத்தில், காரில் இருந்த சூரியகுமார் லேசான காயம் அடைந்து உயிர் தப்பினார். கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தினேஷ்குமார்  மற்றும் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சிந்துஜா  இருவரும் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ்

அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிககப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  மீட்டு, சூர்யகுமார் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  சூரியகுமாரின் தந்தை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை பார்த்து விட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web