பெண்களை அவதூறாகப் பேசிய ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே அகணி கிராமத்தில், கோயில் நிலத்தைச் சுற்றிய பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களை அவமதிப்பாகக் கூறி, அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கும் வகையில் வாட்ஸ்அப் குழுவில் பதிவேற்றங்களை செய்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் மீது சீர்காழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அகணி, மன்னன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான மங்கையர்கரசி குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 18/09/2025 அன்று, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் அறிவிப்பின் பேரில், அவர்களுக்கு சொந்தமான நிலத்தை காலியாக செய்து வெளியேற வேண்டியதாக கூறப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று எண்ணி, 22/09/2025 அன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் வீரமணி, பெண்களின் மனு குறித்து அறிந்ததும், அவர்களை குறிவைத்து ‘நல்லகாத்தாயி அம்மன்’ என்ற 121 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் அவமதிப்பூட்டும் கருத்துகள், பொய்யான புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பதிவேற்றினார். இது கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட பெண்களும், ஊர்க்காரர்களும் ஒன்றுகூடிச் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சீர்காழி போலீசார், புகாரின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, வீரமணிக்கு இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக பாதிக்கப்பட்ட பெண்களும், மன்னன்கோவில் கிராம மக்கள் அனைவரும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர். கோவில் நிலப் பிரச்சினை மற்றும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் அவதூறு பரப்பல் சம்பவம் சீர்காழியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
