அதிர்ச்சி.. ஓடும் பேருந்தில் திடீரென உடைந்த பலகை .. கீழே விழுந்த பெண் பயணிக்கு நேர்ந்த சோகம்..!

 
அரசு பேருந்து

சென்னை திருவேக்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் வழித்தட எண் 59 பேருந்து, என்.எஸ்.கே. நகர் சிக்னலை கடந்த போது, ​​பேருந்தின் பின் இருக்கைக்கு அடியில் இருந்த பலகை உடைந்து, இருக்கையில் இருந்த பயணி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு பேருந்து நின்றதால் உயிர் தப்பினார். பேருந்தில் இருந்து ஓட்டை வழியாக கீழே விழுந்த பெண் சிறிது தூரம் பேருந்தின் அடியில் தொங்கிய நிலையில் வந்துள்ளார்.

சென்னையில் ஓடும் பேருந்தில் திடீர் ஓட்டை- சரிந்து விழுந்த பெண் பயணியால்  பரபரப்பு | A woman passenger fell down a sudden hole in a bus running in  Chennai

பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியதையடுத்து, பயணிகளும், அருகில் இருந்தவர்களும் விரைந்து ஓடி கீழே விழுந்த பெண் பயணியைக் காப்பாற்றியதால், பின் வந்த வாகனம் கீழே விழுந்த பெண் பயணி மீது மோதவில்லை. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கீழே விழுந்த பெண் பயணிக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

மாநகரப் பேருந்தின் வழிகாட்டி பலகை உடைந்து, பேருந்து ஓட்டை வழியாக பயணி ஒருவர் சாலையில் விழுந்தார். மேலும் விபத்து நடந்த பேருந்தில் இருந்த பயணிகளை மாற்று பேருந்தில் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web