அதிர்ச்சி... நண்பனை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்த சக நண்பர்!!

 
ரபிக்

திருப்பூர் மாவட்டத்தில்  காங்கேயம் ரோடு வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர் ரபிக். இவருக்கு வயது 28. இவர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் முகம்மது இலியாஸ். இருவரும் சேர்ந்து   மது அருந்துவது வழக்கம். அதேபோல்  திருப்பூர் யுனிவர்சல் தியேட்டர் அருகே இருவரும் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.  போதை ஏறியதும்  ரபிக் தனது நண்பன் முகமது இலியாஸின் மனைவியை தவறாக பேசியுள்ளார்.

போதை குடி சாராயம் குற்றம் க்ரைம்

இதில் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வளர்ந்தது.   ஆத்திரமடைந்த முகமது இலியாஸ் தான் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து ரபிக் தலையில் ஆத்திரம் தீர அடித்தார். அத்துடன் ஆத்திரம் தீரவில்லை.    உடைந்த பாட்டிலை கொண்டு கழுத்து வயிறு உட்பட பல   இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.  இதில் படுகாயம் அடைந்த ரபிக் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.

பீர் பாட்டிலால் குத்திக் கொலை

அவரின் அலறல் சத்தம் கேட்டு  அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.உடனே பாட்டிலை கீழே போட்டுவிட்டு  அங்கிருந்து முகமது இலியாஸ் தப்பி ஓடி விட்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை சம்பவம்  குறித்து  வழக்குப்பதிவு செய்யப்பட்டு  தப்பிச்செல்ல முயன்ற கமது இலியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை