பைக் டாக்சியில் சென்ற கல்லூரி மாணவிக்குபாலியல் தொல்லை!!

 
ரமேஷ்

ஓலா , ஊபர்  ஆட்டோ , கேப்களை தாண்டி தற்போதெல்லாம் பைக் டாக்சிகள் சென்னையில் பிரபலமாகி வருகின்றன. பேருந்துக் கட்டணத்தை ஒட்டியே இருப்பதால் தனியாக பயணம் செய்ய வேண்டிய பலரும் இப்போதெல்லாம் ஆட்டோ, கேப்களை தவிர்த்து பைக் டாக்சிகளையே புக் செய்து வருகின்றனர்.  அந்த வகையில்  சென்னை சூளைமேட்டில்   23 வயது கல்லூரி மாணவி ஒருவர்  ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல ஓலா பைக் டாக்சி புக் செய்துள்ளார்.  

பைக், டாக்சி

சரியான நேரத்தில் வந்த  பைக்கை மதுராந்தகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தான் ஓட்டி வந்தார்.  பைக்கில் செல்லும் போதே ரமேஷ் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார். அத்துடன் ஆபாசமாக பேசிக்கொண்டே பைக் ஓட்டினார்.   இதனை அந்த பெண் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துவிட்டார். அத்துடன் உடனடியாக தனது குடும்பத்தினருக்கு மெசேஜ் மூலமாகவும் பைக் டாக்சி ஓட்டுநரின் செயல் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

போலீஸ்


 வீட்டு வாசலில் பதற்றத்துடன் மகளுக்காக காத்திருந்த பெற்றோர், பைக் ஓட்டி வந்த ரமேஷை சுற்றி வளைத்து பிடித்து  போலீசில் ஒப்படைத்தனர். இந்தபுகாரின் அடிப்படையில் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி கைது செய்தனர். அதே நேரத்தில் இந்த மாதிரியான சம்பவங்களை தடுக்கும் வகையில்   பைக் டாக்சி ஓட்டுநர்கள் அனைவருக்கும்   போலீஸார் அறிவுரை வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web