பெரும் சோகம்... காரும், லோடு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி உடல் நசுங்கி தம்பதி பலி.. மகன் படுகாயம்... !

 
விபத்து

 
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் வசித்து வருபவர்  கோவிந்தன்.  60 வயதாகும் இவருடைய மனைவி   உமா மகேஸ்வரி .  இவர்களது மகன் 22 வயது பிரவீன்சுந்தர்.  3 பேரும் ஒன்றாக சேர்ந்து குடும்பமாக திருவண்ணாமலை சென்றனர். இதற்காக  நேற்று முன் தினம் இரவு பிப்ரவரி 3ம் தேதி  தங்களுடைய சொந்த காரில்  புறப்பட்டனர். காரை பிரவீன்சுந்தர் ஓட்டி வந்தார்.  

விபத்து

புதுக்கோட்டை சத்தியமங்கலம் அருகே  வந்தபோது எதிரே சத்தியமங்கலத்திலிருந்து எதிரில் வந்த மினிவேன் மீது கார் நேருக்குநேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில்   இரு கார்களும் மோதி  ஒன்றுக்கொன்று   இடிபாடுகளில் சிக்கியது. அருகில் இருந்தோர், கடப்பாரையால் இரு  வாகனங்களையும் தனித்தனியாக பிரித்தெடுத்தனர். இதில் கோவிந்தன் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.   காரில் இருந்த மற்ற 2 பேர், மினிவேன் ஓட்டி வந்த கௌதம்கார்த்திக் மூவரும்  படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும்  உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்


மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள்   உமாமகேஸ்வரியும் பரிதாபமாக பலியானார்.   இதில் பிரவீன் சுந்தர், கௌதம்கார்த்திக் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து  வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். ஆசை ஆசையாக குடும்பத்துடன்   காரில் திருவண்ணாமலைக்கு சுற்றுலா சென்ற தாய்-தந்தை‌ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web