ஜோடியாக மது அருந்திய தம்பதி... தலைக்கேறிய போதையில் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!

 
போதை மனைவி டாஸ்மாக்

தம்பதியர் ஜோடியாக அமர்ந்து மது அருந்திய நிலையில் விபரீதமாக கணவனை மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருன்றனர் . ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகலாத சர்தார் (42) என்பவரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.

இவரது முதல் மனைவி உயிரிழந்து விட்ட  நிலையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 36 வயதான பிங்கி என்ற பெண்ணை 2-வதாக பிரகலாத சர்தார் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஒரு மாதமாக சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளி வளாகத்தில் தங்கி இருந்து கட்டுமான பணியில் இருவரும் ஈடுபட்டு வந்தனர்.

போதை

இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கணவன் -மனைவி இருவரும் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்.   அதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பிரகலாத சர்தார், பிங்கியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தார்.  

இதில் அதிர்ச்சி அடைந்த பிங்கி கணவரை தள்ளிவிட்டு அருகில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு ஆவேசமாக ஓடி சென்று, கணவரின் கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பிரகலாத சர்தாரின் இடது பக்க கழுத்தில் ஆழமான கத்தி குத்தி காயம் ஏற்பட்டது. இதில் கீழே சாய்ந்த பிரகலாத சர்தார் ரத்த வெள்ளத்தில் துடித்தபடியே சரிந்தார். பின்னர் தனது நண்பர்களை கூச்சல் போட்டு அழைத்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

அவர்கள் ஓடி சென்று, உடனடியாக மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவமனை  ஊழியர்கள் பிரகலாத சர்தாருக்கு மாத்திரை மட்டும் கொடுத்து விட்டு தையல் எதுவும் போடவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தான் வேலை செய்து வந்த மாந்தோப்பு பள்ளிக்கு சென்று மத்திரையை மட்டும் போட்டுவிட்டு பிரகலாத சர்தார் படுத்து தூங்கி விட்டார்.  

கத்திகுத்து காயம் ஏற்பட்ட இடத்தில் உரிய தையில் போடாததால் அதிலிருந்து ரத்தம் வெளியேறி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்று  பிரகலாத சர்தாரின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி பிங்கியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?