குடியரசு தின விழா: தமிழகத்தின் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் அலங்கார ஊர்தி... !

 
குடவோலை

இந்தியா முழுவதும் 75வது குடியரசு தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி தேசியக் கொடிக்கு மரியாதை  செலுத்தினார். அத்துடன் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.  அமெரிக்கா, ரஷ்யா நாடுகள் இந்தியாவுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. 

முப்படை

மேலும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் ஊர்வலத்தை கண்டு ரசித்தார்.  குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,500 பெண் நடனக் கலைஞர்கள் நடனமாடியது கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.

மோடி

தமிழகத்தை பொறுத்தவரை டெல்லி குடியரசு தின விழாவில் குடவோலை முறையை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறச் செய்திருந்தனர்.  
'குடவோலை கண்ட தமிழ்க் குடியே வாழிய வாழியவே' என்ற பாடலுடன் ஊர்தி அணிவகுப்பாக சென்றது. பழங்காலத்தமிழகத்தின் தேர்தல் நடைமுறையை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தது அனைவரின் கண்களையும் கவர்ந்தது.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web