”லக்கோ லக்”.. சபரிமலைக்கு சென்ற பக்தருக்கு விழுந்த ரூ.20 கோடி பரிசு.. லாட்டரி டிக்கெட்டில் அடித்த ஜாக்பாட்.!
புதுச்சேரியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கேரள லாட்டரி மூலம் ரூ.20 கோடி ஜாக்பாட் வென்றார். கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிராவில் எக்ஸ் சி 224091 லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்துள்ளது. சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயது தொழிலதிபர் ஒருவர், கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய லாட்டரி பரிசான ரூ.20 கோடி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் வென்றுள்ளார்.
வெற்றிக்கான டிக்கெட்டுகள் பத்மநாப சுவாமி கோவில் கிழக்கு நாத லட்சுமி மையத்தில் உள்ள துணை ஏஜென்டிடம் இருந்து வாங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி இயக்குநரகத்தில் தேவையான ஆவணங்களுடன் வெற்றி பெற்ற டிக்கெட்டை ஒப்படைக்கும் போது தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
பின்னர், அந்த நபர் தனது பெயரையோ அல்லது முகவரியையோ ஊடகங்களுக்கு தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால் சபரிமலை ஐயப்பன் தரிசனம் முடித்து திருவனந்தபுரம் வந்த போது இந்த லாட்டரி சீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் திருவனந்தபுரம் பம்பருக்கு அடுத்தபடியாக அதிக பரிசு பெறும் லாட்டரி சீட்டு ஆகும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பர் முதல் பரிசாக ரூ.20 கோடியும், இரண்டாம் பரிசாக தலா ரூ.1 கோடியும் 20 பேருக்கு வழங்கப்பட்டது. முதல் பரிசு பெறுபவருக்கு வரி மற்றும் ஏஜென்ட் கமிஷன் கழித்து சுமார் ரூ.12 கோடி கிடைக்கும்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க