பரபரப்பான பஜாரில் இரட்டை கொலை.. காப்பாற்ற சென்ற நண்பருக்கும் நேர்ந்த விபரீதம்..!

 
மகேந்திரன் - சுரேஷ்

ஹரி மார்கெட்டிங் என்ற  சமையலறை உபகரணக் கடை  குமார்பேட்டை பெங்களூரில் அமைந்துள்ளது. எப்போதும் பரபரப்பான இந்த பகுதியில் நேற்று உரிமையாளர் சுரேஷ் (55) வழக்கம்போல் கடையில் இருந்தபோது, ​​அவரது நெருங்கிய நண்பரான மகேந்திரன் (68) வந்தார்.

murder

அப்போது திடீரென கடைக்குள் புகுந்த ஒருவர் சுரேஷை சரமாரியாக வெட்டிக் கொன்றார். இதை தடுக்க முயன்ற நண்பர் மகேந்திரனை கொன்றுவிட்டு அந்த நபர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

Police

இதையடுத்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக தூரத்து உறவினரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நிலையில், அல்சூர் போலீசார் பத்ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பரபரப்பு மிகுந்த பகுதியில், இரட்டை கொலை நடந்திருப்பது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web