அதிர்ச்சி... பிச்சை எடுத்து உண்ணும் பிரபல நடிகை... சந்நியாசியாக குகையில் தஞ்சம் புகுந்த பரிதாபம்!

 
நடிகை
 

27 ஆண்டுகளாக இந்தி தொலைக்காட்சி உலகில் பிரபலமாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், தற்போது தனது புகழும், செல்வமும், குடும்ப வாழ்க்கையும் அனைத்தையும் துறந்து இமயமலையில் சந்நியாசியாக வாழ்ந்து வருகிறார்.

‘சக்திமான்’, ‘தியா அவுர் பாதி ஹம்’ போன்ற வெற்றித் தொடர்களில் நடித்த அவர், ஒரு காலத்தில் ரசிகர்களால் விரும்பப்பட்ட முன்னணி தொலைக்காட்சி நடிகையாக இருந்தார். ஆனால், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பிஎம்சி வங்கி மோசடியில் தனது வாழ்நாள் சேமிப்பை முழுவதுமாக இழந்தார். அதற்கு பிறகு, தாய் மற்றும் சகோதரியின் மரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், உலக வாழ்க்கையின் மீது விரக்தியடைந்தார்.

இதையடுத்து, தனது கணவரின் விருப்பமில்லாத நிலையிலும், நடிப்பு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை முழுமையாகத் துறந்து சந்நியாசம் மேற்கொண்டார். தற்போது ‘பீதாம்பரா மா’ என்ற ஆன்மீகப் பெயரில் இமயமலையில் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அங்கு குகைகளிலும், தொலைதூர கிராமங்களிலும் தங்கி, பிச்சை எடுத்து கிடைக்கும் உணவை உட்கொள்கிறார்.

கடுமையான பனி மற்றும் எலிக்கடி போன்ற சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்தாலும், “இப்போது தான் உண்மையான அமைதியை அனுபவிக்கிறேன்; உலக வாழ்க்கையின் அழுத்தங்கள் இன்றி மிகவும் நிம்மதியாக உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.ஒருகாலத்தில் சின்னத்திரை உலகின் பிரகாசமான நட்சத்திரமாக இருந்த நூபுர் அலங்கார், இன்று அனைத்தையும் துறந்து ஆன்மீக வாழ்க்கை நடத்துவது, இந்தி தொலைக்காட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!