பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை!!

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை அடுத்த திருமழிசையில் வசித்து வருபவர் பிரபல ரவுடி எபினேசர். நசரத்பேட்டை, மாங்காடு, பூந்தமல்லி காவல் நிலையங்களில் இவர் மீது கொலை, கொலை முயற்சி குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. நேற்று இரவு கடம்பத்தூர் வரை சென்று விட்டு ஆட்டோவில் சென்னை நோக்கி பேரம்பாக்கம் தண்டலம் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த கார் ஆட்டோவை வழிமறித்து நின்றது. காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல், ஆட்டோவின் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசத் தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த எபினேசர் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடத் தொடங்கினார். ஆனால் அவரை விடாமல் விரட்டிச் சென்ற கும்பல், தாங்கள் வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள் உட்பட பயங்கர ஆயுதங்கள் மூலம் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
இது குறித்து தகவல் அறிந்து வந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த கிடந்த ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் தனியார் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் இரும்பு கழிவுகளை ஒப்பந்தம் எடுப்பதில் அரசியல் பிரமுகர்கள், ரவுடிகள் இடையே தொழில் போட்டி நிலவி வருகிறது. இதன் அடிப்படையில் தொடர் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!