சென்னையில் இன்று அதிகாலை என்கவுண்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை... ஆம்ஸ்ட்ராங்க் கொலைக் குற்றவாளி நாகேந்திரனின் சிஷ்யன்!

 
பாலாஜி
 

இன்று அதிகாலை சென்னையில் நடந்த என்கவுண்டரில் சென்னை - புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். 

இன்று அதிகாலை சென்னை வியாசர்பாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியே வந்த வாகனத்தை மடக்கி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் கஞ்சா இருந்துள்ளதையடுத்து வாகனத்தை நிறுத்தாமல் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி, போலீசாரை தட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். போலீசார் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற போது, அவரது வாகனம் பழுதாகி நடுவழியில் நின்றுள்ளது.

பாலாஜி

தொடர்ந்து அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர், அந்த பகுதியில் மறைந்து கொண்டு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், தங்களைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கில் போலீசார் பதில் தாக்குதல் மேற்கொண்டதில் குண்டு பாய்ந்து ரவுடி காக்கா தோப்பு பாலாஜி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த சம்பவம் வியாசர்பாடி அருகே உள்ள குடியிருப்பு பகுதியான பிஎன்டி குவார்டர்ஸ் அருகே நடந்துள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கட்டப் பஞ்சாயத்து, கொலை, மிரட்டல் என சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது நிலுவையில் உள்ளதாகவும், சென்னையில் பல ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை கைது செய்ய தமிழக காவல் துறை தனிப்படையும் அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி

சென்னை ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டிடிடி தினகரனுக்கு ஆதரவாக ரடிவுகளுடன் பிரசாரம் செய்தவர் காக்கா தோப்பு பாலாஜி. அப்போது ரவுடிகளுடன் வாக்குப்பதிவு நாளில் குழப்பத்தை ஏற்படுத்த பதுங்கியிருந்த போது துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்திருந்தனர். ஒரு காலத்தில் வடசென்னையை கலக்கிய பிரபல ரவுடி நாகேந்திரனுக்காக 'அசைன்மெண்ட்டுகளை' செய்யத் தொடங்கியவர் காக்கா தோப்பு பாலாஜி. இந்த நாகேந்திரனும் அவரது மகனும் தான் தற்போது தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை