திடுக்... நடிகர் பிரபாஸின் கன்னத்தில் அறைந்த ரசிகை... வைரல் வீடியோ!!

 
பிரபாஸ்

இந்திய அளவில் முண்ணனி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் பிரபாஸ்.   ’ஆதிபுருஷ்’ படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ‘சலார்’ படத்திற்காக காத்திருக்கிறார். சலார் திரைப்படம் டிசம்பர் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனையடுத்து  ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி என நட்சத்திரப் பட்டாளங்கள் பலர் களமிறக்கப்பட்டுள்ளனர் .


இந்நிலையில், ரசிகை ஒருவர் ஏர்போர்ட்டில் பிரபாஸூடன் புகைப்படம் எடுப்பதற்காக கேட்டார். நடிகர் பிரபாஸ் சம்மதம் தெரிவித்ததும் பக்கத்தில் சிரித்துக் கொண்டே நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.  

பிரபாஸ்

புகைப்படம் எடுத்ததும் தேங்க்ஸ் சொல்லிவிட்டு  உற்சாகமிகுதியில்   பிரபாஸை விளையாட்டாக கன்னத்தில் அடித்துள்ளார். பிரபாஸூம் அவரது உற்சாகத்தைப் புரிந்து கொண்டு சிரித்துக் கொண்டே இதை ஏற்றுக் கொண்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  2019 ல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில்   வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web