”குடிக்க காசு தா”.. தர மறுத்த மகன்.. ஆத்திரத்தில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை..!

 
பெட்ரோல் குண்டு

சென்னை அடுத்த செங்குன்றம் அருகே நேற்று மாலை மதுவுக்கு பணம் தராத கோபத்தில் மகன் வீட்டின் மீது தந்தை பெட்ரோல் குண்டை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். செங்குன்றம் அருகே நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (60). தொழிலாளி. இவருக்கு மனைவியும், தினேஷ் (30) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

மகன் தினேஷ் லாரி மெக்கானிக். குருசாமியின் மனைவி இறந்துவிட்டதால், அவரது மகன் மற்றும் மகள் வீட்டில் வசித்து வந்தனர். தந்தை குருசாமியும், மகன் தினேசும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் குடிபோதையில் இருந்த மகன் தினேஷிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார் தந்தை குருசாமி.

தினேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் வெளியே சென்ற குருசாமி நேற்று இரவு குடிபோதையில் மகன் வீட்டுக்கு திரும்பினார். அவர் கையில் பெட்ரோல் குண்டுகள் இருந்தன. அப்போது குருசாமி தனது மகனை வெளியில் அழைத்து, மது குடிக்க பணம் தர மாட்டியா.. இப்போது பார், நான் உன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசுகிறேன் என வீசியுள்ளார்.

அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ் பிரமுகர்களின் இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு,  subsequently-petrol-bombs-were-thrown-at-the-places-of-rss-personalities

அதிர்ச்சியடைந்த மகன் தினேஷ் உடனடியாக ஓடி வந்து வெடிக்கும் முன் தண்ணீரை ஊற்றி அணைத்தார். இதற்குள் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து குருசாமியின் கையில் இருந்து மேலும் சில பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றினர். இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டை வீசிய குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web