பாலின அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய போலீஸ்.. மனைவிக்கு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சி..!
பெண்ணாக இருந்து ஆணாக மாறிய காவலருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது..
லலிதா சால்வே மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2010ம் ஆண்டு மராட்டிய காவல்துறையில் பெண் காவலராக பணியில் சேர்ந்தார்.இந்நிலையில் தனது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு ஆண் குணாதிசயங்கள் அதிகமாக இருப்பதாக உணர்கிறார். அதன்பேரில், டாக்டர்கள் சோதனை நடத்தியதில், லலிதாவுக்கு ஆண்களைப் போலவே 'எக்ஸ்' மற்றும் 'ஓய்' குரோமோசோம்கள் இருப்பது தெரியவந்தது. ஆணாக மாற பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, லலிதா சால்வே, 2017 செப்டம்பரில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய, மாநில போலீஸ் தலைமையகத்தில் அனுமதி கோரியிருந்தார். ஆனால், போலீஸ் தலைமையகம் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நிர்வாக தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். அவருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 2018ல் அனுமதி வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, 20018 முதல் 2020 வரை 3 முறை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை லலிகுமார் சால்வே என்று மாற்றிக் கொண்டு மராட்டிய காவல்துறையில் ஆண் காவலராக தொடர்ந்து பணியாற்றினார். இவருக்கும் சத்ரபதி சாம்பாஜிநகரைச் சேர்ந்த சீமா என்ற பெண்ணுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சால்வே, 'பெண்ணாக இருந்து ஆணாக மாறிய எனது பயணம் போராட்டங்கள் நிறைந்தது. இந்த நேரத்தில், எனக்கு ஆதரவாக பலர் இருப்பது எனக்கு பாக்கியம். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். இப்போது நான் அப்பாவான மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவ்வித்தார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க
