அதிர்ச்சி... எரிபொருள் நிலையத்தில் தீவிபத்து.. 20 பேர் உடல் கருகி பலி!!

 
நாகோர்னோ-கராபாக்

தென்மேற்கு ஆசிய நாடான அசர்பைஜானுக்கு சொந்தமான பகுதி நாகோர்னோ-கராபாக். இந்த நாடு  1994 முதல்  அர்மீனியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.   இந்த பகுதிகளை அங்குள்ள பிரிவினைவாதிகள் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர்.தனது நாட்டின் பகுதிகளை மீண்டும் இணைக்கும் வகையில் அசர்பைஜான் ராணுவம் திடீரென களமிறக்கப்பட்டது.  அந்த சமயத்தில் அவர்களுக்கு எதிராக  ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரிவினைவாதிகள் சரண் அடைந்தனர்.   பதற்றமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்தவர்கள் அர்மீனியாவுக்கு தப்பி செல்ல முயன்றனர்.  

நாகோர்னோ-கராபாக்

அசர்பைஜானின் ஸ்டெபனகெர்ட்டில் உள்ள கேஸ் நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக ஏராளமான கார்கள் அணிவகுத்து நின்றன. அப்போது அந்த கேஸ் நிலையத்தில் திடீரென தீப்பிடித்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் பல கார்கள் தூக்கி வீசப்பட்டன.இந்த தீ மளமளவென அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.   தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர்.  

நாகோர்னோ-கராபாக்

பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலியாகினர். 300க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில்   அனுமதித்தனர். அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web