கொடைக்கானலில் பயங்கர தீ விபத்து.. காட்டு தீயாக மாறும் அபாயம்.. அணைக்க போராடும் வீரர்கள்.!

 
கொடைக்கானல் தீ

கொடைக்கானல் பள்ளங்கி கிராமம் அருகே தனியார் நிலத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மலைப்பகுதி முழுவதும் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தனியார் நிலங்களில் செடி, கொடிகள், புதர்கள் காய்ந்து தீ எரிந்து வருகிறது.

கொடைக்கானல் தீ

இந்நிலையில், பள்ளங்கி கிராமம் அருகே உள்ள தனியார் நிலத்தில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அப்பகுதியில் உள்ள புல்வெளிகள் மற்றும் புதர்களில் தீ பரவி மெதுவாக எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மலை சரிவுகளில் தீ பரவி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

கொடைக்கானல் தீ

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் உள்ளது. வெப்பத்தால் தீ எரிந்ததா? யாராவது தீ வைத்தார்களா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web