கூடவே இருந்து குழி பறித்த நண்பன்.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளி.. பகீர் வாக்குமூலம்!

 
ஆம்ஸ்ட்ராங்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூர் வேணுகோபாலப் பெருமாள் தெருவில் அவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டின் அருகே ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் தனிப்படை அமைத்து ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆம்ஸ்ட்ராங்

இதில், ஆம்ஸ்ட்ராங்கைக் கொல்லப் பயன்படுத்திய ஆயுதங்களைக் காட்டச் சென்ற போலீஸாரை தாக்கிவிட்டு ரவுடி திருவேங்கடம் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அடுத்தடுத்து கைதுகள் நடந்து வருகின்றன. திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, உதவியாளர் ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவின் அஞ்சலைக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான அஞ்சலையை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் திருமலைக்கும் முக்கிய பங்கு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கிடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள துப்பாக்கி இருந்தது அனைவரும் அறிந்ததே. உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்தார். எங்கு சென்றாலும் அந்த துப்பாக்கியுடன் தான் செல்கிறார். அவரை நெருங்க முடியாத அளவுக்கு ஆதரவாளர்களும் இருப்பர். ஆனால், தன் வீட்டுக்குப் பக்கத்து கடைகளுக்கும், வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்தாமல் செல்வார். மேலும் பெரம்பூர் ஆம்ஸ்ட்ராங்கின் கோட்டையாக இருந்ததால், துப்பாக்கி இல்லாமல் சாதாரணமாக வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். இதெல்லாம் எப்படியும் நெருங்கியவர்களுக்கு தெரியும். அதையறிந்த போலீசார், சரியான நேரத்தில் ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்துவிட்டதாக சந்தேகிக்கின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்

அப்போதுதான் அவர்களுக்கு திருமலை பற்றிய விவரம் தெரிய வந்தது. பெரம்பூரைச் சேர்ந்தவர் திருமலை. ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங்குடன் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார். மேலும் திருவிக நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறியப்பட்டுள்ளார். இவர் மீது இரண்டு கொலை வழக்குகள் மற்றும் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவருக்கு 45 வயது. ஆம்ஸ்ட்ராங் போல ஆற்காடு சுரேஷுக்கும் நண்பர். ஆனால் ஆம்ஸ்ட்ராங்கை விட திக் ப்ரெண்ட் ஆர்க்காடு சுரேஷ் தான். தனது நண்பர் ஆற்காடு சுரேஷ் கொலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் திருமலை நினைத்ததாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்திற்கு ஆட்டோவில் சென்று அவரை தெரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறார். அப்போதுதான் ஆம்ஸ்ட்ராங் கூலிப்படையினரிடம் இந்த நேரத்தில் தான் புதிய கட்டிடத்திற்கு வருவார் என்றும் அதுவும் துப்பாக்கி இல்லாமல் வருவார் என்றும் கூறியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web