பெரும் சோகம்... எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி விபத்து ... 48 பேர் உடல்கருகி பலி!
Sep 10, 2024, 10:35 IST
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இந்த சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
