வைரல் வீடியோ... நெற்றியில் குங்குமம் , கழுத்தில் மாலை மறக்க முடியாத தருணம்... நடிகை தமன்னா நெகிழ்ச்சி.. !

 
தமன்னா

முண்ணனி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.  குறிப்பாக, ‘லஸ்ட் ஸ்டோரிஸ்2’ மற்றும் ‘ஜெயிலர்’ படங்களுக்குப் பிறகு அவரது மார்க்கெட் மீண்டும் உச்சம் அடைந்துள்ளது.  ‘லஸ்ட் ஸ்டோரிஸ்2’ படத்திற்குப் பிறகு  விஜய் வர்மாவுடனான காதலையும்  உறுதிப்படுத்தியுள்ளார்.  

விஜய் வர்மாவுடன் எப்போது திருமணம் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்த நிலையில் இருவரும் கரியரில் கவனம் செலுத்தி வருவதாகவும்,  திருமணத்திற்கு இன்னும் நாள் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.  தற்போது தமன்னா  அம்மா, அப்பா என குடும்பத்துடன்  ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார்.  கெளஹாத்தியில் உள்ள கமாக்யா கோவிலுக்கு சென்ற அவர்  சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்துள்ளார்.  

தமன்னா
கழுத்தில் பூஜை மாலையுடன் நெற்றி நிறைய குங்குமத்துடன் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.  இது குறித்து   " என் அன்புக்குரியவர்களுடன் எனக்கு மறக்கமுடியாத தருணம்" எனவும் பதிவிட்டுள்ளார்.  இதைப் பார்த்தப் பலரும் திருமணத்திற்கு முந்தைய ஆன்மிகப் பயணமா அல்லது திருமண ஏற்பாட்டிற்கா என நெட்டிசன்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க