தரை தட்டிய மிதவைக் கப்பல்!! மீட்பு பணிகள் பின்னடைவு!!

 
மிதவைக்கப்பல்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில்  5 மற்றும் 6வது அணு உலைக்கான நீராவி இயந்திரங்கள்  ரஷ்யாவில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டன. இதனை  இழுவை கப்பல் மூலம்   திருநெல்வேலிக்கு கொண்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கூடங்குளம்

 300 டன் எடையுள்ள இந்த 2 ஜெனரேட்டர்களை  இழுவை கப்பல் மூலம் கடல் மார்க்கமாக கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு கொண்டுவரும் பணிகளில்தொய்வு ஏற்பட்டுள்ளது.    திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால், ரோப் கயிறுகள் அறுந்து  சில கிலோமீட்டர் கப்பல் இழுத்துச் செல்லப்பட்டு தரை தட்டி நின்றது.இந்நிலையில் நெல்லை கூடங்குளம் அருகே கடலில் தரை  தட்டிய கப்பல்  2  முதல் 3 நாட்களில்  மீட்கப்படும்.  

கூடங்குளம்

கப்பலில் உள்ள ஜெனரேட்டரை வேறு கப்பலுக்கு மாற்றி கரைக்கு கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என நிர்வாகம் அறிவித்துள்ளது.  கடந்த இரண்டு நாட்களாக கப்பலை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் 3 நாட்கள் ஆகும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web