நெகிழ்ச்சி வீடியோ!! கையசைத்து , தம்ஸ் அப் காட்டிய விஜயகாந்த்!! கண்கலங்கிய தொண்டர்கள்!!

 
விஜயகாந்த்

இன்று ஆகஸ்ட் 25ம் தேதி வெள்ளிக்கிழமை தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள். இதனை  முன்னிட்டு இன்று காலை, தேமுதிக அலுவலகத்தில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகம் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்தார்.


 விஜயகாந்தை  பார்ப்பதற்காக காலை 9 மணி முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர்.  அதில் சிலர் குழந்தைகளுடன் குடும்பமாக விஜயகாந்தைக் காண வந்திருந்தனர். சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி 100க்கும்  மேற்பட்டோர் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.  காலை  11.30 மணிக்கு தலைமை அலுவலகத்திற்கு விஜய்காந்த் வருகைத் தந்தார். அவரை பார்த்ததும் தொண்டர்கள் ’’கேப்டன்......கேப்டன்’’ என வாழ்த்து முழக்கமிட்டனர்.

ஒரு சிலர் விஜயகாந்தைப் பார்த்து கண்கலங்கினர்.  கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைத்தார்.அதே சமயத்தில் பேசிய பிரேமலதா  “கேப்டன் குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதனை யாரும் நம்ப வேண்டாம். நமது தலைவர் நூறாண்டு காலம் வாழ்வார்’’ எனக் கூறினார்.  இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘படை தலைவன்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web