கொடூர விபத்து... கார் ஆற்றில் கவிழ்ந்தது... சைதை துரைசாமி மகன் மாயம்!

 
சைதை துரைசாமி

சென்னையின் முன்னாள் மேயரும் , முன்னாள் எம்எல்ஏவுமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி, இமாச்சல் பிரதேசத்தில் சட்லஜ் நதிக்கரையின் ஓரத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விபத்தில், கார் கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலியான நிலையில், ஆற்றில் விழுந்த வெற்றி மாயமாகி உள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெற்றி துரைசாமி

அதிமுகவைச் சேர்ந்த சைதை துரைசாமி, கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலினிடம் தோல்வியடைந்தார். அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை மேயரானார்.

சைதாப்பேட்டை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான சைதை துரைசாமிக்கு வெற்றி என்ற மகன் உள்ளார். இவர் நண்பர்களுடன் காரில் இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் காசாங் நாலா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில்  சென்று கொண்டு இருந்த போது, கார் அருகே இருந்த சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. சைதை துரைசாமி மகன் வெற்றியுடன் திருப்பூரைச் சேர்ந்த கோபிநாத் என்பவரும் பயணித்துள்ளார்.

விபத்து

இந்த விபத்தில் அவரும் படுகாயமடைந்து மீட்கப்பட்டுள்ளார். ஆனால், இவர்களுடன் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றியைக் காணவில்லை. இந்த விபத்தின் போது அவர் காரில் இருந்தாரா அல்லது வேறு எங்கும் சென்றாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனாலும், சட்லஜ் நதியில் வெற்றியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுற்றுலா சென்ற இடத்தில் சைதை துரைசாமியின் மகன் சென்ற கார் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மகன் மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web