”என் மீது வழக்கு போடுங்க”.. என் மனைவியை கொன்னுட்டேன்.. தெரு நாயால் நேர்ந்த விபரீதம்..!

 
தெரு நாய்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள நர்மதா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரேஷ் தோஷி. அங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அமிதா. கடந்த ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள அம்பாஜி கோவிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

Gujrat News: कुत्र्याला वाचवायला गेला, कार अपघातात बायकोचा जीव गेला;  नवऱ्याची स्वतःविरुद्धच पोलिसांत तक्रार| gujarat car accident wife dies  because stray dog man file fir ...

அவர்கள் வந்த கார் கெரோகே-கேத்பிரம்மா நெடுஞ்சாலையில் டான் மஹுதி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக நாய் ஒன்று குறுக்கே ஓடியது. காரை ஓட்டி வந்த பரேஷ் தோஷி, நாய் மீது மோதாமல் இருக்க ஸ்டீயரிங்கை திருப்பினார். அப்போது, ​​எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டில் உள்ள தடுப்புகளில் மோதியது.

Gujarat man files FIR against himself after wife dies in car crash while he  tried to save stray dog

இதில் அவரது மனைவி அமிதா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதனால் மனமுடைந்த பரேஷ் தோஷி தன் மனைவி இறந்ததற்கு தான் கவனக்குறைவால் வாகனம் ஓட்டியதே காரணம் என்று நினைத்து குற்றவுணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார். தொடர்ந்து அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று, தன் மீது எஃப்.ஐ.ஆர் பதியும்படி கேட்டுள்ளார். இவரின் வாக்குமூலத்தின் படி காவல்துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web