தோட்டத்தில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!
கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள எட்டிமடை பகுதியில் ஜெகநாதர் என்பவர் தனது தோட்டத்தில் வளர்த்த நாய் நேற்று முதல் காணாமல் போனது. நாயை தேடிய பின்னர், அவர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுத்தை தோட்டத்தில் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விக் கொண்டு செல்லும் காட்சி பதிவாக இருந்தது.

இதுகுறித்து அவர் வழங்கிய தகவலின் பேரில் மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குறித்த பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனத்துறையினர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை எச்சரித்து, அக்காலையில் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
