திடீரென தறிகெட்டு ஓடிய லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து... ஓட்டுநர் காயம்!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென லாரி தறிகெட்டு ஓடிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் காயமடைந்தார். சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இருந்து எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு, நேற்று லாரி ஒன்று கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. சம்பாகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (45), என்பவர் லாரியை ஓட்டினார். தளவாய்புரம் அடுத்துள்ள ஆசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி ஒன்று திடீரென திரும்பியது.

இதனால், அந்த லாரி மீது இந்த லாரி மோதாமல் இருக்க, சுப்பிரமணியன் பிரேக் பிடித்ததால், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த எம்.சாண்ட் மண் சாலையில் கொட்டியது. டிரைவர் சுப்பிரமணியன் காயமடைந்தார். கயத்தாறு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
