தமிழகத்திற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்.... காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது.

இன்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை 21ம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்றும், 24ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும், அது தமிழ்நாடு கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
